தருமபுரி – செப்டம்பர் 14, 2025 / ஆவணி 29 -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 10 இணைகளுக்கு இன்று (14.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.
மாநில சட்டப்பேரவை அறிவிப்பில் அறிவிக்கப்பட்டபடி, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மணமக்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமாங்கல்யம், பட்டுவேட்டி, சட்டை-சேட், பட்டுச் சேலை, பீரோ, கட்டில், மெத்தை, மாலைகள், மின் சாதனங்கள் மற்றும் எவர்சில்வர் சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
மேலும், கோயில் நிர்வாகத்தின் சார்பில் மணமக்கள், அவர்களது உறவினர்கள், அழைப்பாளர்கள் அனைவருக்கும் திருமண விருந்தும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. பி.சி.ஆர். மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பே. சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை சேலம் துணை ஆணையர் திருமதி. விமலா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)