பாலக்கோடு, செப்டம்பர் 15 (ஆவணி 30) -
பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில், மாவட்ட பொருளாளர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு பி.கே. முரளி மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கு முன்னதாக, ஓரணியில் “தமிழ்நாடு உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைப்பு, வாக்காளர் பட்டியல் மோசடி, நீட் தேர்வு, கல்வி நிதி மறுப்பு, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக்கு எதிரான பாகுபாடு ஆகியவற்றை கண்டித்து, உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாப்புக்கான நிதியை கோரி, “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் நகர அவைத் தலைவர் அமானுல்லா, ஒன்றிய துணை செயலாளர் பி.எல். ரவி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் மோகன், குமரன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மன்சூர், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, கவுன்சிலர்கள் லட்சுமி ராஜசேகர், சாதிக் பாஷா, ரூஹித், ஜெயந்தி மோகன், மோகன், தீபா சரவணன், நிர்வாகிகள் சக்திவேல், கருணாநிதி, தேவன், துரை, மாதேஷ், ஜாவித், செளகத், ராமமூர்த்தி, அருள், முருகேசன், முத்துமணி, படவட்டை தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் லோகேஸ்வரி, ஶ்ரீதர், தமிழரசன் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.