தருமபுரி – செப்டம்பர் 14, 2025 / ஆவணி 23, 2056
தருமபுரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ.மணி எம்பி அவர்கள் பேசியதாவது: “தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் கீழடி ஆராய்ச்சி புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி உதவியை மறுத்தல், நீட் தேர்வு போன்ற நியாயமற்ற முறைகள், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான தொகுதி சீரமைப்பு போன்றவற்றை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இவற்றிற்கு எதிராக தமிழ்நாடு மக்களின் மண், மொழி, மானம், உணர்வுகளை காக்க திமுக முதல்வர் அவர்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உன்னத திட்டத்தை அறிமுகப்படுத்தி, மக்களை ஒன்றிணைத்து வருகிறார். நாளை நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழாவில், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்கப்படும். மேலும், வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற அணியில் இணைந்திருக்கும் அனைத்து குடும்பங்களும் ஒன்றிணைந்து தீர்மானங்களை ஆதரிக்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டம் தோறும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற உறுதி மொழி பரப்பப்படும்” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் நகர செயலாளர் நாட்டான்மாது, ஒன்றிய செயலாளர்கள் காவேரி, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)