நல்லம்பள்ளி, செப் 19 (புரட்டாசி 03) –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 2.0 பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களால் இன்று தொடங்கிவைக்கப்பட்டு பார்வையிடப்பட்டன.
இதையடுத்து, அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் எடுக்கப்பட்டது. “சுத்தமே சுகாதாரம்” என்ற வாழ்வியல் வழிமுறையை கடைபிடித்து, அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது என உறுதி மொழியினை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழியின் போது, அலுவலகங்களில் காகிதங்களின் பயன்பாட்டை குறைத்தல், உணவருந்தும் இடம் மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், மீதமான உணவுப்பொருட்களை தனியாக சேகரித்து முறையாக அப்புறப்படுத்தல், தூய்மை குறித்த விழிப்புணர்வை பரப்புதல் உள்ளிட்ட அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், பல்வேறு அலுவலர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
.gif)

