பென்னாகரம், செப்டம்பர் 19 | புரட்டாசி 03 :
பென்னாகரம் ஒன்றியம், செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமையேற்றார்.
விழாவில் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் நா. சரவணன் கலந்து கொண்டு, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார். அவர் மாணவர்களிடம் உரையாற்றும்போது,
-
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம்,
-
மரங்களின் பலன்கள்,
-
தூய்மையான காற்றுக்கு மரங்களின் பங்குஆகியவற்றை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை தாயின் பெயரில் நட்டு வளர்க்குமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை முத்துக்குமார், தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி நிறுவனர் சண்முகம், தலைமை ஆசிரியர் பச்சாண்டி, ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, கலைச்செல்வி, ராஜேஸ்வரி, அனுப்பிரியா உள்ளிட்டோர், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மா. கல்பனா நன்றி கூறினார்.
.gif)

