Type Here to Get Search Results !

அரூர் நம்பிப்பட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.


அரூர், செப்டம்பர் 13 (ஆவணி 28) -

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே நம்பிப்பட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் தொடங்கி வைத்தார். முகாமில் மாவட்ட திமுக நிர்வாகிகள் சி. கிருஷ்ணகுமார், சி. தென்னரசு, வே. செளந்தரராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். வேடம்மாள், கோ. சந்திரமோகன், முல்லைரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அத்துடன், மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பல்வேறு துறை சார்ந்த அரசு பணியாளர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு பயன் அடையும் வகையில் முகாமைச் சிறப்பாக நடத்தினர். முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நிபுணர் மருத்துவர்கள் பங்கேற்று, பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு, கண், பல், எலும்பியல், தோல் நோய், உட்புறச் சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் பரிசோதனை மேற்கொண்டனர்.


மேலும், இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயம், சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள், மற்றும் பெண்களுக்கான சுகாதார பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சுமார் 800-க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் மருத்துவ சேவைகளைப் பெற்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெற்று, “மருத்துவ சேவைகள் மக்களின் வீட்டு வாசலில்” என்ற நோக்குடன் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies