Type Here to Get Search Results !

தருமபுரியில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, செப்டம்பர் 14 (ஆவணி 29) - 

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்.பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செப்டம்பர் 9 அன்று முதலமைச்சர் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான தயாரிப்புகள், செப்டம்பர் 15 அன்று நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை தருமபுரி மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளில் பூத் வாரியாக “தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழியுடன் சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


அதேபோல், செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பது, ஓரணியில் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை வலுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மசெல்வன், அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர்கள் காவிரி, பெரியண்ணன், சண்முகம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம், துணை அமைப்பாளர் உதயசூரியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies