தருமபுரி, செப்டம்பர் 10 (ஆவணி 25):
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அரியப்பன், நரேஷ்குமார், மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை செயலாளர் ரமேஷ், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் கடந்த 9ம் தேதி காணொலி மூலம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள், செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பூத் வாரியாக “தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி, செப்டம்பர் 17ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பது, ஓரணியில் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய செயலாளர்கள் அடிலம் அன்பழகன், வக்கீல் கோபால், பஞ்சபள்ளி அன்பழகன், கண்ணபெருமாள், ஆனந்தன், சரவணன், முத்துக்குமார், சந்திரமோகன், பேரூர் செயலாளர்கள் சீனிவாசன், பி.கே. முரளி, வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.சி.ஆர். மனோகரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)