Type Here to Get Search Results !

பென்னாகரம் அடுத்த முள்ளுவாடி துவக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


பென்னாகரம், ஜூலை 25 | ஆடி 09 -


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் முள்ளுவாடி ஊராட்சி துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு (SMC) தலைவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. முருகவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


அவரது உரையில், பள்ளி வயதுடைய அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் முயற்சி, அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் குறித்து பெற்றோருக்கு அறிவுறுத்தல், இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் கல்வி தொடர்வதற்கான நடவடிக்கைகள், தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்தல், அடைவு தேர்வு (SLAS), திறன் திட்டம், இல்லம் தேடி கல்வி, வானவில் மாணவர் மன்ற செயல்பாடுகள் மற்றும் கல்வித்துறையின் இணை செயல்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக பேசினார்.


மேலும், பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, பழுதடைந்த கட்டிடங்களை பழுது பார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இக்கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக சேவகர் திரு. இர்பான் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகள் வழங்கினர். பள்ளி முன்னேற்றம், மாணவர்களின் சிறந்த கல்வி மற்றும் வளமான கல்வி சூழலை உருவாக்க இத்தகைய கூட்டங்கள் பலனளிக்கக்கூடியதாக அமைகின்றன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies