Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஆட்சியர், பென்னாகரத்தில் செயல்படும் பாலீன வள மைய பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு.


பென்னாகரம், ஆடவை (ஆனி) 07-

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பருவதனஅள்ளியில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பாலீன வள மையத்தில், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு நிறுவனம் மூலமாக வழங்கப்படும் செயற்கை நகை தயாரிப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.06.2025) ஆடவை (ஆனி) 07 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆலோசனை வழங்கி, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த மையம் செயல்படுகிறது. இங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மையத்தின் தற்போதைய பணிகள் மற்றும் அதன் சமூகப் பயன்பாடு குறித்து அலுவலர்களுடன் விவாதித்து, மேலும் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்கினார்.


இந்நிகழ்வில், கடந்த காலத்தில் 34 குடும்ப வன்முறை சம்பந்தமான பிரச்சனைகள் சமூகநலத்துறை, காவல் துறை மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் ஒத்துழைப்புடன் தீர்க்கப்பட்டுள்ளன. இதேபோல், இளவயது திருமணங்களை தடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார்கள் தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பிளாஷ்டிக் அரைப்பு மெஷின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.


அதனைத் தொடர்ந்து, பென்னாகரம் வட்டம் சதியநாதபுரம் ஊராட்சியில் உள்ள சோமனஹள்ளி ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வில், உதவி திட்ட அலுவலர் திரு. செங்கோட்டுவேல், மாவட்ட வள பயிற்றுநர் திரு. பெருமாள், பாலின வள மைய மேலாளர் திருமதி ஆசைவேணி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. லோகநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies