ஆடவை, (ஆனி) 09-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில், நடிகர் விஜய் அவர்களின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையிலேயே நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தாபா சிவா, நகர செயலாளர் விக்னேஷ் மற்றும் லயோலா மணி ஆகியோர் முன்னிலையில் கலந்துகொண்டனர்.
இதில் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் அருள்ராஜா சிறப்புரையாற்றி பேசினார். அவர் பேசியதாவது, "திமுக அரசு குடும்ப அரசியலையும், வாரிசு அரசியலையும் செய்து வருகிறது. அரசு முழுவதும் ஊழல் நடந்து கொண்டே இருக்கிறது. திமுக பாஜகவிடம் தனது கொள்கையை அடமானம் வைத்து, தங்களின் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு தூணாக செயல்படும் கட்சி திமுகதான்" என்றார்.
மேலும், "வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் வெற்றி பெற்று, தளபதி விஜய் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்பார்" என உறுதியுடன் கூறினார். இக்கூட்டத்தின் இறுதியில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது. கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பானிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.