Type Here to Get Search Results !

தண்ணீர் பிரச்சனையில் பஞ்சாயத்து கிளார்க்கை தாக்கிய நால்வர் மீது வழக்கு.


பாலக்கோடு, ஜூன் 10-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தண்டுகாரணஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் (41), பேவுஅள்ளி பஞ்சாயத்தில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (42) என்பவருடன் விவசாய கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக முந்தைய காலங்களில் சில தகராறுகள் ஏற்பட்டிருந்தன.


இந்த நிலையில், கடந்த ஜூன் 8ஆம் தேதி "பிரச்சனையை பேசித் தீர்ப்போம்" என கூறி ராஜீவ்காந்தி, பவுன்ராஜை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். பவுன்ராஜ் அதை நம்பி சென்றபோது, ராஜீவ்காந்தி மற்றும் அவரது உறவினர்கள் சுரேஷ் (39), குபேந்திரன் (45), சத்யா (32) ஆகியோர் இரும்பு ராடு மற்றும் கட்டைகளால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.


இதனால் பலத்த காயமடைந்த பவுன்ராஜ் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் ராஜீவ்காந்தி உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies