தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட தருமபுரி நகராட்சி வார்டு எண்.11 மற்றும் அரூர் பேரூராட்சி வார்டு எண்.6 ஆகிய இடங்களுக்கான நகர்புற தற்செயல் / இடைக்காலத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள், இன்று (05.05.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களால் வெளியிடப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததுபடி, 31.03.2025 தேதிக்குள் ஏற்பட்டுள்ள வார்டு உறுப்பினர் காலியிடங்களை நிரப்ப இந்த இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்காக, புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன
வாக்காளர் பட்டியல் விவரம்:
வ.எண் | நகர்புற அமைப்பின் பெயர் | ஆண் | பெண் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | தருமபுரி நகராட்சி வார்டு எண்.11 | 530 | 565 | 0 | 1095 |
2 | அரூர் பேரூராட்சி வார்டு எண்.6 | 447 | 528 | 0 | 975 |
இந்த நிகழ்வில், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, வருவாய் கோட்டாட்சியர் திருமதி. இரா. காயத்ரி, நகராட்சி ஆணையர் திரு. சேகர், மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி பிரிவு அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்காக நகராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களது பெயர், விவரங்கள் உள்ளிட்டவை சரிபார்த்துக்கொள்ளலாம்.