தருமபுரி நேரு யுவ கேந்திராவில் புதிய மாவட்ட இளைஞர் அலுவலராக ஜே. டிரவின் சார்லஸ்டன் பதவி ஏற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 24 ஏப்ரல், 2025

தருமபுரி நேரு யுவ கேந்திராவில் புதிய மாவட்ட இளைஞர் அலுவலராக ஜே. டிரவின் சார்லஸ்டன் பதவி ஏற்பு.

WhatsApp%20Image%202025-04-23%20at%2022.23.27_dde934f4

தருமபுரி, ஏப்ரல் 23:

இந்திய அரசின் நேரு யுவ கேந்திரா அமைப்பில், தருமபுரி மாவட்ட மாவட்ட இளைஞர் அலுவலராக பணியாற்றி வந்த திரு. பிரேம்பரத்குமார் அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய ஜே. டிரவின் சார்லஸ்டன் அவர்கள், இன்று (23.04.2025) கூடுதல் பொறுப்பாக தருமபுரி மாவட்ட இளைஞர் அலுவலர் மற்றும் துணை இயக்குனராக பொறுப்பேற்றார்.


இவரை நேரு யுவ கேந்திரா அலுவலகத்தின் கணக்கு மற்றும் திட்ட அலுவலர் திரு. அப்துல்காதர், அலுவலக பணியாளர் செல்வி வெண்ணிலா, பல்நோக்கு பணியாளர் ரா. முனியப்பன் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், அங்காளம்மன் பாரமெடிக்கள் கல்லூரியின் இயக்குனர் திரு. சிலம்பரசன், முதல்வர் திரு. துரை, ஜெயம் யோகா அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ஜெயப்பிரியா, கக்கன் இளைஞர் நற்பணி சங்கத்தின் தலைவர் பாவெல்ராஜ் மற்றும் அதியமான் டிவியின் இயக்குநர் கபில்தேவ் ஆகியோரும் கலந்து கொண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad