Type Here to Get Search Results !

நல்லம்பள்ளியில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது


தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூர் பகுதியில் இன்று (ஏப்ரல் 4, 2025) இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. ப்ரீத்தம் மருத்துவமனை மற்றும் சேவாபாரதி தமிழ்நாடு இணைந்து இந்த முகாமை நடத்தியது.


காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற்ற முகாமில், மூட்டு வலி, கை, கால், காது, மூக்கு, தொண்டை, கண், பல் மற்றும் உடல்நல பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் (BP), இருதய நோய்களுக்கு சிறப்பு பரிசோதனை மற்றும் ECG பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.


மருத்துவ நிபுணர்கள் பல்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கினர். தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றனர். முன்பதிவு இல்லாமலே, அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டமை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.


முகாமில் தருமபுரி ஜே.சி.ஐ அமைப்பின் பாபு (தலைவர்), கணேஷ் (செயலாளர்), விஜயகுமார் (முன்னாள் தலைவர்), பிரசன்னா (இயக்குனர் - நிர்வாகம்), ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ் பாபு,  சேவா பாரதி அமைப்பின் விவேக், ஆதி அறக்கட்டளை அமைப்பின் தலைவர் ஆதிமூலம் மற்றும் ஜே.சி.ஐ தருமபுரி பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் வினோத் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இம்முகாமை JCI தர்மபுரி மற்றும் ஸ்ரீமஹாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies