Type Here to Get Search Results !

தருமபுரியில் பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு 90% மானியத்துடன் DAJGUA திட்டம் தொடக்கம்.


தருமபுரி, ஏப்ரல் 24:

மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (PMMSY) கீழ் புதிய முயற்சியாக “தர்தி ஆபா ஜன்ஜதியா கிராம் உட்கர்ஷ அபியான் (DAJGUA)” எனும் திட்டம் தற்போது தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2024-25 முதல் 2028-29 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் அமையும். இதன் கீழ் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மானியம் 90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.


திட்டத்தின் பயனாளர்களாக தருமபுரி, அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் வட்டாரங்களைச் சேர்ந்த 19 கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இக்கிராமங்களில் வத்தல்மலை, கத்திரிப்பட்டி, பத்தலமலை, ரெங்கம்பட்டி, சின்னமஞ்சவாடி, எலந்தக்குட்டப்பட்டி போன்ற பகுதிகள் அடங்கும்.


இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:

  • புதிய மீன்வளர்ப்புக் குளங்கள், மீன்குஞ்சு வளர்ப்புக் குளங்கள் அமைத்தல்

  • குளிர்காப்புப் பெட்டியுடன் கூடிய இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல்

  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு யூனிட்கள் அமைத்தல்

  • பயோபிளாக் மற்றும் நீர் மறுசுழற்சி முறையில் மீன்வளர்ப்பு திட்டங்கள்

  • நவீன மீன்விற்பனை மையங்கள், நான்கு சக்கர குளிர்காப்பு வாகனங்கள், சிறிய மீன்தீவன ஆலை போன்றவற்றுக்கு மானியம் வழங்கல்


இந்த திட்டம், மீன்பிடி தொழிலில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தொழில் முன்னேற்றமும், சுதந்திரமான வாழ்வாதாரமும் உருவாக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து பயன் பெறும் வாய்ப்பும் இதில் உள்ளது.



மேலும் விண்ணப்பங்கள் மற்றும் திட்ட தொடர்பான விளக்கங்கள் பெற தருமபுரி ஒட்டப்பட்டியில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம்.
தொடர்பு எண்கள்: 04342-232311, 93848 24260 பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் புதிய காலத்திற்கான துவக்கம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies