Type Here to Get Search Results !

மலைவாழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி வட்ட வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கொட்டதண்டகாடு, தொண்ணகுட்டஹள்ளி, குழிப்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மனித-விலங்கு மோதல்களைக் குறைத்து, பொதுமக்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், தருமபுரி வனக்கோட்டம், பாலக்கோடு வனச்சரகம், தருமபுரி வனச்சரகம், பென்னாகரம் வனச்சரகம், ஒகேனக்கல் வனச்சரகம் ஆகியவைகளின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தருமபுரி வனக்கோட்டம் வனத்துறை மற்றும் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து நடத்தப்பட்டது. மலைப்பகுதிகளில் மனித-விலங்கு மோதல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள், யானைகளின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மலைவாழ் மக்கள், வனத்துறையினர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies