Type Here to Get Search Results !

அதிக மின் கட்டணம்; மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து குழந்தையுடன் சாலையில் அமர்ந்து இளம்பெண் தர்ணா.

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே உள்ள பிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சபரி சங்கர்- லலிதா 30 தம்பதியினர். விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். பயன்பாட்டை விட, பல மடங்கு அதிகமாக மின்சார கட்டணம் வசூலிப்பதாகவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக அதிகாரிகள்  பதில் அளிப்பதாக குற்றம் சாட்டி கைக்குழந்தையுடன் பென்னாகரம் தர்மபுரி பிரதான சாலையில் பென்னாகரம் மின்வாரிய அலுவலகம் முன்பு தனிமையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


அவரிடம் விசாரித்ததில், விளக்கம் கேட்டால் விளக்கம் தராமல் வீட்டில் உள்ள மின்சாரத்தை துண்டித்ததாக பெண் கண்ணீர் சிந்தினார், பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இது போன்ற முறையான மின் கட்டணம் வசூலிக்காமல் வீடுகளுக்கு சென்று முறையாக மின் கணக்கீடு செய்யாமல், அலுவலகத்தில் இருந்தபடியே கணக்கீடு செய்து, அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாகவும், மின்வாரிய அலுவலகத்தில் சென்று முறையிட்டால், அதிகாரிகள் மரியாதை குறைவாகவும், அலட்சியமாகவும் பதில் அளிப்பதாகவும் நீண்ட நாட்களாகவே புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies