Type Here to Get Search Results !

தக்காளியின் விலை திடீரென சரிவு கிலோ 6ரூபாய்க்கு விற்பனையால் விவசாயிகள் கவலை


பாலக்கோடு மார்கெட்டிற்கு வெளிமாநில தக்காளி வரத்து அதிகரிப்பால் தக்காளியின் விலை திடீரென சரிவு கிலோ 6ரூபாய்க்கு விற்பனையால் விவசாயிகள் கவலை

 

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி,  வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பெல்ரம்பட்டி, சோமனஹள்ளி, பேகாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது உள்ளூர் மற்றும் வெளிமாநில தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடுமையாக சரிந்துள்ளது இன்று ஒரு கிலோ தக்காளி விலை கிலோ 6 ரூபாய்க்கும்  15கிலோ கொண்ட கூடை 120 வரை விற்பனையானது  சென்ற மாதம் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது, ஒரே மாதத்தில் தக்காளி வரத்து அதிகரித்து அதன் காரணமாக விலை குறைந்துள்ளது.  இந்த விலை குறைவு தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாவும் ஆடு, மாடுகளுக்கு உணவாகவும், சாலையோரம் வீசி எறிந்தும் வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  


தமிழக அரசு சார்பில் தக்காளி விலை குறைவு காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயாரித்து விற்பனை செய்ய வாகனம் சில ஆண்டுகளுக்கு  அறிமுகப்படுத்தப்பட்டது, வாகனம் விவசாயிகளுக்கு பயன் இல்லாத வகையில் உள்ளது. மேலும் 20கோடி ரூபாயிலபாதிக்கப்பட்டுள்ளனர் வேளாண் குளிர்சாதன கிடங்கு பயன்பாட்டில் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்று தக்காளி விலை குறைவான காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விவசாயிகள் விற்பனை செய்ய விற்பனை சந்தையை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies