Type Here to Get Search Results !

ஆசியன் கோப்பைக்கான பாரம்பரிய வில்வித்தை போட்டிக்கு இந்தியா சார்பாக தமிழகத்திலிருந்து 3 வீரர்கள் நமது தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் முதல் நாளாக இன்று பங்கேற்பு.

ஆசியன் கோப்பைக்கான பாரம்பரிய வில்வித்தை போட்டிக்கு இந்தியா சார்பாக தமிழகத்திலிருந்து 3 வீரர்கள் நமது தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் முதல் நாளாக  இன்று பங்கேற்பு.


தமிழகத்திலிருந்து முதல்முறையாக ஆசியன் கோப்பைகான பாரம்பரிய வில்வித்தை போட்டிக்கு கஜகஸ்தானில் சிம்கண்ட் என்னும் நகரத்தில் மார்ச் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டம் வனவாசி கிராமத்தை சார்ந்த திரு.மதன்குமார் தயாளன் அவர்களுக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த திரு.வெங்கடேசன் கோவிந்தன் நெடுமாறன் நகர் மற்றும் திரு சத்திய உதயமூர்த்தி (எ) வெங்கடேஷ் கோவிந்தராஜ் இலக்கியம்பட்டி ஆகிய இருவரும் ஆசியன் கோப்பைகான பாரம்பரிய வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டர்கள். 


இதில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, துர்க்மெனிஸ்தான், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, தெற்கு கொரியா குடியரசு, துருக்கி, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய 11 நாடுகள் கலந்து கொள்கின்றனர்கள். இதில் இந்தியா சார்பாக தமிழகத்திலிருந்து 3 பாரம்பரிய வில்வத்தை வீரர்கள் முதல் முறையாக நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பங்கேற்றனர்.


இந்திய பாரம்பரிய வில்வித்தை சங்க தலைவர் திரு.வெ.சம்பத்குமார் அவர்கள் மற்றும் ஷாவ்லின் ஸ்போர்ட்ஸ் அகாடமி, தர்மபுரி மாவட்ட வில்வித்தை சங்க தலைவர் திரு.சீனிவாசன் மற்றும் செயலாளர் திரு.சீனிவாஸ் ஆகிய அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்கள். இது முதல் முறையாக  நமது தமிழக பாரம்பரியமான உடையான வேட்டி சட்டையில் போட்டியில் கலந்து கொண்டது  உலக ஆர்ஞ்ச் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies