Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அரூரில் பருத்தி ஏலம் – ₹13.20 லட்சத்திற்கும் மேல் விற்பனை.


தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து 82 விவசாயிகள், 160 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.


இதில், ஆர்.சி.எச். ரகம் பருத்தி குவிண்டாளுக்கு ₹6,909 முதல் ₹7,689 வரை விற்பனையானது. மொத்தமாக, 160 குவிண்டால் பருத்தி ₹11 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று இ-நாம் (e-NAM) மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் 24 விவசாயிகள், 32 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.


இதில், ஆர்.சி.எச். ரகம் பருத்தி குவிண்டாளுக்கு ₹7,099 முதல் ₹7,299 வரை விற்பனையானது. மொத்தமாக, 32 குவிண்டால் பருத்தி ₹2.20 லட்சம் மதிப்பில் விற்பனையானது. இதன்மூலம், மொத்த பருத்தி விற்பனை ₹13.20 லட்சத்தை கடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies