Type Here to Get Search Results !

மருத்துவத் தொழில் ஆங்கிலத் தேர்வுக்கான இலவச பயிற்சி – விண்ணப்பிக்க அழைப்பு.


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவத் தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கான (Occupational English Test - OET) இலவச பயிற்சியை வழங்குகிறது.


பி.எஸ்.சி / எம்.எஸ்.சி நர்சிங், போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 21-35 வயதிற்குட்பட்டவர்களுக்கான இந்த பயிற்சியில் விடுதி வசதி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் தாட்கோ மூலம் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன், தகுதியான நபர்களுக்கு அயல்நாட்டில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.


விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட அலுவலகம், தருமபுரி தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies