Type Here to Get Search Results !

பாலக்கோடு பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.


பாலக்கோடு, மார்ச் 31: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது. வழக்கம்போல் விற்பனைக்காக கடையை திறந்த நிலையில், கடையின் கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்ட பகுதியில் திடீரென தீ பற்றி, அடர்ந்த புகை வருவது தெரிந்தது.

இதை கண்டு கடை உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும், கடை முழுவதும் தீ வேகமாக பரவியது. தகவலின் பேரில் பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் தீ முழுவதும் பரவியதால், தர்மபுரியில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் நீர்பீச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச்சாமான்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. பாலக்கோடு காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், மின்பலகையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதைக் கண்டறிய, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தீ விபத்து காரணமாக, ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies