Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் மறியல் போராட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலை கைதை கண்டித்து  பாஜகவினர் மறியல் போராட்டம் நகர தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்திற்க்கு மாவட்ட பொது செயலாளர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் குணாஜி முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு  மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.


இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து  சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முற்றுகை போராட்டம் நடத்த முயன்றார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.


இதனை கண்டித்தும் தமிழக  அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி 50 க்கும் மேற்பட்ட பாஜக  தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


இந்த சாலை மறியலில் மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கீதா, ஸ்ரீதேவி, சின்னவன், நகர பொறுப்பாளர்கள் தண்டபாணி, சரவணன், முனியப்பன், சிவநாதன், வேலு, பெரியசாமி, நந்தகிரி, கருணாகரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies