Type Here to Get Search Results !

குமாரசாமிபேட்டையில் அமைக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்தக உரிமம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் வருகின்ற 24.02.2025 அன்று காணொலி காட்சியின் வாயிலாக தொடங்கி வைக்கப்படவுள்ளதை தொடர்ந்து, தருமபுரி நகராட்சிக்குட்பட்ட குமாரசாமிபேட்டையில் அமைக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்தக உரிமம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.


மேலும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சி, குமாரசாமி பேட்டையில் அமைக்கப்படவுள்ள முதல்வர் மருத்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுதந்திர தின சிறப்புரை அறிவிப்பில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, வருகின்ற 24.02.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முதல்வர் மருந்தகங்கள் காணொலி காட்சி (Online streaming)-இல் தொடங்கி வைத்திடும் விழா நடைபெறவுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சி, குமாரசாமிபேட்டை பகுதியில் அமைக்கப்படவுள்ள தொழில்முனைவோரின் முதல்வர் மருந்தகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருந்தக உரிமம் சான்றினையும் ஆய்வு செய்து, தேவையான மருந்துகள் விற்பனைக்கு இருப்பதனை உறுதி செய்திட வேண்டுமெனவும், தொடக்க விழாவிற்கான உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூமாண்டஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (2024-2025) கீழ் ரூ.24.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும், காளிப்பனஅள்ளி ஊராட்சி, கள்ளிப்பட்டி காலனியில் சுரங்கம் மற்றும் கனிமவளம் திட்டத்தின் கீழ் ரூ.8.20 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பெருமாள்கோட்டை கிராமத்தில் ரூ.5.65 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதையும், அடிலம் ஊராட்சி, ஏ.சப்பாணிப்பட்டி கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூமாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.


மேலும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோடியூர் ஊராட்சி, மேல்சென்றாயன்பட்டி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் சுவை மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து, குழந்தைகளுடன் மதிய உணவு உண்டார். இந்த ஆய்வுகளின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சரவணன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.மலர்விழி, வட்டாட்யர் திரு.கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சர்வோத்தமன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies