Type Here to Get Search Results !

சர்வதேச NGO தின விழா மை தருமபுரி அமைப்பின் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.


பிப்ரவரி 27 உலகம் முழுவதும் சர்வதேச அரசு சாரா அமைப்புக்களின் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் சமூக நல்வாழ்வு, வளர்ச்சி, நிவாரணம்,  இயற்கை பேரிடர், வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், மனித உரிமைகள் பணிகளைச் செய்யும் இலாப நோக்கற்ற அமைப்புகள் பல ஏழ்மையில் உள்ள மக்களுக்கு மனிதநேயமிக்க சேவைகளை செய்து வருகின்றனர். 

இந்த தினத்தை தருமபுரி மாவட்டத்தின் சிறந்த மனிதநேயமிக்க சேவைகளை செய்து வரும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ் அவர்கள் தலைமை தாங்கினார், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் வரவேற்புரை ஆற்றினார், நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா வாழ்த்துரை வழங்கினர், செயலாளர் தமிழ்செல்வன் நன்றியுரை கூறினார். விழாவிற்கு எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் V4U பிரகாஷ், மனுநீதி கட்டுமானம்  தொழிற்சங்கம் அர்ஜுனன், மின் அமைப்பாளர் மத்திய சங்கம் தாமோதரன் வெல்டிங் ராஜா, டூரிஸ்ட் வேன் ஓட்டுநர்கள் முன்னேற்ற சங்கம் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள்.உரிமை குரல் ஹரிகுமார், மற்றும் நிர்வாகிகள்.சிறுகடை தள்ளுவண்டி வணிக தொழிலாளர் சங்கம் வீரமணி, தர்மபுரி மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் யுவராஜ் சண்முகம், இளங்கோவன் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ராஜசேகரன், நாடக கலைஞர் சாரதி, பத்திரிகையாளர் நந்தகுமார், கல்வியாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.


இவ்விழாவினை  (TSTLU) கட்டுமான தொழிலாளர் சங்கம் பொது செயலாளர் கிருஷ்ணன், அருள்மணி, சையத் ஜாபர், கணேஷ், கோகுல்ராஜ், குணசீலன், ஜெய் சூர்யா, வள்ளி, நித்யா, பிரேமா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies