தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அஜ்ஜனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியவத்தலாபுரம் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ கன்னிபாலி ஐய்யனாரப்பன் கருப்பசாமி ஸ்ரீ பூர்ண கால புஷ்பகாலா மற்றும் பரிவார தெய்வங்கள் இரண்டாம் ஆண்டு ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 31ஆம் தேதி விநாயகருக்கு மகா கணபதி வழிபாடு பஞ்ச கவ்ய பூஜை ,கணபதி ஹோமம் மகாலட்சுமி ஓமம் நவகிரக ஓமம் நடைபெற்றது. அதன் பின்பு காவிரி நதியிலிருந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.
முளைப்பாரி ஊர்வலம் உத்ஸவ மூர்த்தி ஊர்வலம் பம்பை வாத்தியம் மேலதாளங்களுடன் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து மங்கள இசை முழுங்க ஸ்ரீ விநாயகர் வழிபாடு, புன்யாஹம், வாஸ்து சாந்தி, ப்ரவேஸபலி, பேரிபூஜை ,பூமிதேவி வழிபாடு, சிவசூர்ய பூஜை ஆகிய பூஜை நடைபெற்றது. பின்னர் கோபுர கலச ஸ்தாபனம் கோபுரம் கண் திறத்தல் தானியம் நிரப்புதல் போன்ற பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மங்கள இசை முழங்க விக்னேஸ்வரா பூஜை நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பு சாமி அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு அங்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த கும்பாபிஷேக விழாவில் விழா குழுவினர் தர்மகத்தா அண்ணாமலை கவுன்சிலர் மணி எல்ஐசி மந்திரி அன்பு கோவிந்தசாமி பொன்னுசாமி தன்ராஜ் வெங்கடாசலம் சவுண்டப்பன் சேலம் பூமழை நாட்றபாளையம் மணி பூசாரி அண்ணாதுரை அசோகன் சிவசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.