Type Here to Get Search Results !

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லானூர் பகுதியில் அமைந்துள்ள ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடைபெற்றது.


இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேவரசம்பட்டி தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனமும் கல்லூரியில் இயங்கி வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இணைந்து இப் பயிற்சி பட்டறை நடத்தியது.


நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார். நிகழ்விற்கு ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி வாழ்த்துரை வழங்கினார்.


நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தேவரசம்பட்டி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் பா.ஜேக்கப் , மண்டல அலுவலர் ம.செந்தில் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சினை வழங்கினர்.


மாணவர்கள் தொழில் தொடங்குவது குறித்தும், இந்திய அரசு மானியங்கள், தமிழ் நாடு அரசு மானியங்கள், வங்கி கடன் பெறும் வழிகள் குறித்தும், தொழில் முனைவோர் விளக்கம், தொழில்களில் எதில் முதலீடு செய்வது, திட்ட அறிக்கை தயாரித்தல் போன்றவை பயிற்சி அளிக்கப்பட்டது.


நிறைவாக கல்லூரியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநர் முனைவர் அ.இம்தியாஸ் நிகழ்வில் நன்றி கூறினார். நிகழ்வின் முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் வரவேற்று பேசினார். நிகழ்வில் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் சி.தமிழரசு , பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies