Type Here to Get Search Results !

பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து சேதமடைந்த பேருந்துகள் இயக்கம் - பொதுமக்கள் அச்சம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து தினந்தோறும் நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில பேருந்துகள் 7லட்சம் கி.மி கடந்தது பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், பாலக்கோடு முதல் வெள்ளிச்சந்தை மாரண்டஹள்ளி அத்திமுட்லு வரையும் தினசரி தடம் எண் 3 கொண்ட நகர பேருந்தும் அதேபோல தடம் எண் 5 நகர பேருந்தும்  பஞ்சப்பள்ளி வரை சென்று வருகிறது. இந்த இரண்டு பேருந்துகளிலும் அதிக அளவில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள்  காலை மாலை சென்று வருகின்றனர். 


இந்த பேருந்து அடிக்கடி சாலை நடுவே பழுதாகி நிற்பது வாடிக்கையாக உள்ளதாகவும். மேலும் இன்று பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்தின் பக்கவாட்டு தகடு பிரிந்து ஆபத்தான நிலையில் தொங்கி உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சேதடைந்த  பழைய பேருந்துகளை மாற்றி புதிய நகர பேருந்தை இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies