Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் எதிர் வரும் 10.02.2025 திங்கள்கிழமை அன்று தேசிய குடற்புழு நீக்க நாள் (National Deworming Day) கடைப்பிடிக்கப்பட உள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் எதிர் வரும் 10.02.2025 திங்கள்கிழமை அன்று தேசிய குடற்புழு நீக்க நாள் (National Deworming Day) கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (ITI, பாலிடெக்னிக்) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) 10.02.2025 திங்கள்கிழமை அன்று வழங்கப்படும். 10.02.2025 அன்று விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் (Mop-up day) 17.02.2025 திங்கள்கிழமை அன்று நடைபெறும். அன்றைய தினத்தில் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை தவறாமல் வழங்கப்படும்.


இப்பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினருடன் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, உயர் கல்வி துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிகின்றனர்.


தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 5.15 லட்சம் குழந்தைகளுக்கும் மற்றும் 20-வயது முதல் 30-வயது வரை உள்ள 1.22 இலட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) குழந்தைகள் உட்கொள்வதால் ஏற்படும்

நன்மைகள்:-

  • இரத்தசோகையை தடுக்கிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
  • அறிவுத்திறன் மேம்படுகிறது.
  • உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.


தருமபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க நாள் அன்று அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதற்கு ஊக்குவிக்கவும், குடற்புழு நீக்க மாத்திரையின் பயன் மற்றும் வழங்கப்படும் நாள் குறித்து பொதுமக்கள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி தருமபுரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க திட்டம் சிறப்பாக நடைபெற பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கவும், தொடர்புடைய அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றவும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies