Type Here to Get Search Results !

பாலக்கோடு கம்மாளர் தெருவில் மொபட் திருடிய 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கம்மாளர் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி (வயது.35) இவர் லாரி டிரைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு வீட்டின் முன்பு இவருடைப மொபட்டை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். நேற்று விடியற்காலை பார்த்த போது மொபட் திருடு போயிருந்தது தெரிய வந்தது.


பல இடங்களில் தேடியும் மொபட் கிடைக்காததால் மொபட்டை கண்டுபிடித்து தரக்கோரி பாலக்கோடு போலிசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.


அவர்களை பிடித்து விசாரித்ததில் பேளாரஅள்ளியை சேர்ந்த தீனதயாளன் (வயது. 25), திம்மம்பட்டியை சேர்ந்த ஆனந்தன் (வயது.19) பனந்தோப்பு பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன், அங்காண்டஅள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன், தொட்டம் பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் என 5 பேர் கூட்டாக மொபட் திருடியதும் மேலும் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது.


5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மொபட்டை பறிமுதல் செய்த போலீசார் தீனதயாளன், ஆனந்தன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். மேலும் 3 சிறுவர்களையும் சேலம் சிறுவர்கள்  காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies