Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சின்ன பள்ளியில்  2006 ஆம் ஆண்டு நடுநிலை பள்ளியானது தரம் உயர்த்தப்பட்டு அரசு உயர் நிலைப் பள்ளியாக செயல்பட்டது.இதில் 2006-2007 முதல் முறை பத்தாம் வகுப்பு தொடங்கியது. அந்த  ஆண்டில் படித்த மாணவர்கள் 18 வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஒன்று இணைந்து நலம் விசாரித்தனர். முதலில்  படித்த மாணவர்கள் விபத்து அல்லது உயிரிழந்த மாணவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


பின்னர் மனைவி குழந்தைகள் அனைவரையும் அறிமுகம் செய்து கொண்டு வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவர் செல்போனில் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தனர். குழந்தைகள் வளர்ச்சி குறித்தும் பேசி கொண்டனர் பிறகு குழந்தைகளுக்கான பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடனப் போட்டிகள் நடத்தப்பட்டது.அதில் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.


18 வருடங்களுக்கு பிறகு சந்தித்த தோழி தோழர்கள் நட்பு சிறப்பு மிக்கதாக காணப்பட்டது. அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மீண்டும் இது போல் நினைவுக்கள் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் திரும்பினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies