Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஏழ்மையில் இறந்த வடமாநில முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்.

மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுருதார் மாவட்டத்தின் பகன்பரி கிராமத்தை சேர்ந்த சுதன்சு தாஸ் என்பவர் கடந்த பத்து ஆண்டுகளாக கேரளா மாநிலம் கொல்லத்தில் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பருடன் சொந்த ஊருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ரயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டது. 


உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், இவரது புனித உடலை வெஸ்ட் பெங்கால் கொண்டு செல்ல முடியவில்லை. இவரது மகன் சுதிப் தாஸ் மற்றும் மொரப்பூர் ரயில் நிலைய காவலர் தேவராஜ் ஆகியோர் மூலம் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் இவரது புனித உடலை ரோட்டரி மின் தகன மையத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்து அஸ்தியை அவரது மகனிடம் ஒப்படைத்தனர். 


மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், செந்தில், சண்முகம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமைப்பின் மூலம் இதுவரை 124 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies