Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார்  அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில்  5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்க்கு  வட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் தண்டபாணி வரவேற்புரை ஆற்றினார்.


இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றி கொடுக்க முன்வராத தமிழக அரசை கண்டித்தும், கிராம உதவியாளர்கள் இறந்து விட்டால் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கியதை மீண்டும் தொடர வேண்டும் எனவும்,  சி.பி.எஸ் திட்டத்தில் பணி செய்து  ஓய்வுபெற்று இறந்து போன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்யப்பட்ட  தொகையையும், அதற்குண்டான அரசு பங்கீட்டையும்,  இதுநாள் வரை வழங்காததை கண்டித்தும், புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு நிரந்தரமான சி.பி.எஸ் எண் வழங்க கோரியும், கிராம உதவியாளர்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்தி வருவதை கண்டித்தும், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதில் பாலக்கோடு வட்ட துணைத் தலைவர் தனபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், மாதேஷ்,  வட்ட பொருளாளர் அன்பழகன்  மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies