Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

திருவள்ளுவர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளதையொட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று (15.1.2025) மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை, 01.01.2000 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில், அதற்கான வெள்ளி விழாவினை கொண்டாடுமாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


அதனைத் தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன், வெள்ளி விழா கொண்டாடும் பொருட்டு, தருமபுரி மாவட்டத்தில் திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருக்குறள் விளக்க உரைகளையும் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. 


மேலும், வாசகர் வட்டம் மூலம் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, வினாடி வினா, திருக்குறள் ஒப்புவித்தல், போன்ற போட்டிகள் நடைபெற்றது. மேலும், தருமபுரி பேருந்து நிலையத்தில், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில், உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. இரா.காயத்திரி வட்டாட்சியர் திரு. சண்முக சுந்திரம் உள்ளிட்ட அரசு லுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies