Type Here to Get Search Results !

JCI தருமபுரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.


ஜனவரி 1 முதல் 31 வரை சாலை பாதுகாப்பு மாதம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதில் அரசின் சார்பிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தருமபுரி நகரில் JCI சர்வதேச அமைப்பின் தருமபுரி பிரிவின் சார்பில் தருமபுரி 4 ரோடு சந்திப்பில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது, இதில் முறையாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது, இது குறித்து JCI தருமபுரி பிரிவின் நிர்வாகிகள் கூறுகையில், JCI தருமபுரி அமைப்பு நமது மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது, அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுவதால், வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினோம், முறையாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த சிலருக்கு அவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினோம், என அவர்கள் தெரிவித்தனர்.


இந்த நிகழ்வில் JCI தருமபுரி பிரிவின் சார்பில் தலைவர் பாபு,  முன்னாள் தலைவர் விஜயகுமார், பொருளாளர் பிரசாந்த், துணை தலைவர்கள் சுரேஷ்குமார்,  நிரோஷா, சுபாஷ், பிரசன்னா மற்றும் தருமபுரி போக்குவரத்து காவல்துறையினர் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies