விமானப்படையில் (Indian Air Force) அக்னிவீர் வாயு ஆட் சேர்ப்பு முகாம், சென்னை, தாம்பரம் அலுவலகம் மூலம் 28.01.2025 முதல் 06.02.2025 வரை Airmen (Medical Assistant Trade- General / Pharmacist) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி பணிக்கு திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : 10வது, 12வது அல்லது டிப்ளமோ, பி.எஸ்சி (பார்மசி) முடித்தவர்களாக இருத்தல்.
வயது : 03.07.2021 முதல் 03.07.2008-க்குள்பிறந்திருக்க வேண்டும்.
முகாம் நடைபெறும் இடம் :
Maharaja College Stadium, PT Usha Road, Shenoys Emakulam, Kochi (2Km Ernakulam South Railway Station)
நேரம் : காலை 5.00 மணி முதல்.
எனவே தருமபுரி மாவட்டத்தை சார்ந்த திருமணமாகாத ஆண்கள் கலந்து கொண்டு மத்திய அரசு பணியில் சேர்ந்து பயண்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப. அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.