Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 12,77,917 வாக்காளர்கள் உள்ளனர், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் சிறப்பு சுருக்க திருத்தம் இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை - 2025 மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  முன்னிலையில் இன்று (06.01.2025) வெளியிட்டார்கள்.

 

தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2025-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் / திருத்தம் தொடர்பாக 29.10.2024 முதல் 28.11.2024 வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.  4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

 

சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை தேர்தல் ஆணையத்தினால் நியமனம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு கூட்டம் மற்றும் கள ஆய்வு செய்து மேற்பார்வை செய்துள்ளார்29.10.2024 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,43,962 ஆண்களும், 6,33,783 பெண்களும், 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,63,740 நபர்கள் வாக்காளர்களாக இருந்தனர்சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் பின் வருமாறு விண்ணப்பங்கள் பெறப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

. எண்

 

படிவம்

பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை

1.

பெயர் சேர்த்தல் (படிவம்-6)

26,130

25,301

829

2.

பெயர் நீக்கம் (படிவம் -7)

11,559

11,124

435

3.

திருத்தம் / வண்ணப் புகைப்பட அடையாள அட்டை

(படிவம்-8)

(முகவரிமாற்றம் நீங்கலாக)

6,954

6,187

767

படிவம்-8ன் மூலம் முகவரி மாற்றம் கோரி பெறப்பட்ட 4,615 படிவங்களானது படிவம்-6 (பெயர் சேர்த்தல்) & படிவம் -7 (பெயர் நீக்கல்) - ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம்

44,643

42,612

2,031

 

06.01.2025 ன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி சட்டமன்ற தொகுதிவாரியாக, இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு

 

 

. எண்

சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர்

ஆண்

பெண்

இதர வாக்காளர்கள்

மொத்த வாக்காளர்கள்

1

57-பாலக்கோடு

1,22,998

1,21,224

21

2,44,243

2

58-பென்னாகரம்

1,29,613

1,22,421

9

2,52,043

3

59-தருமபுரி

1,35,019

1,33,298

107

2,68,424

4

60-பாப்பிரெட்டிப்பட்டி

1,31,349

1,31,508

16

2,62,873

5

61-அரூர் (தனி)

1,24,983

1,25,332

19

2,50,334

மொத்தம்

6,43,962

6,33,783

172

12,77,917

கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12,63,740 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். சிறப்பு சுருக்க திருத்தத்திற்கு பின்பு 06.01.2025 இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12,77,917 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை விட  இன்று (06.01.2025) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 14,177 வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர்.

 

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் படிவம்-6 (பெயர் சேர்த்தல்) மற்றும் படிவம்-8 (திருத்தல் / முகவரி மாற்றம் / நகல் அட்டை) அளித்துள்ள அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களின் முகவரிக்கே நேரடியாக புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் பதிவு அஞ்சலில் 31.01.2025-க்குள் அனுப்பிவைக்கப்படும்.

 

18 வயது பூர்த்தியடைந்த மற்றும்  வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள தகுதியான பொதுமக்கள் வாக்காளர்களாக இணைய வழியாக (ONLINE) பதிவு செய்வதற்கு voters.eci.gov.in எனும் இணையதளம் வாயிலாகவும், Voter Helpline எனும் கைப்பேசி செயலி மூலமாகவும், வட்டாட்சியர் அலுவலகத்திலோ மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலோ தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சி.சின்னுசாமி, நகராட்சி ஆணையர் திரு.சேகர், தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அசோக்குமார் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies