Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெற ஏற்றுமதி ஆலோசனை மையம்‌ துவக்கம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


மாண்புமிகு வேளாண்மை உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ 2024 - 2025-ஆம்‌ ஆண்டு வேளாண்மை - உழவர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ "வேளாண்‌ விளைபொருட்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள்‌, அவற்றின்‌ தரம்‌, மதிப்புக்‌ கூட்டுதல்‌, ஏற்றுமதி நடைமுறைகள்‌ போன்ற பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள்‌ எளிதில்‌ அறிந்து கொள்ளவும்‌, வேளாண்‌, வேளாண்‌ சார்ந்த பொருட்களின்‌ ஏற்றுமதியையும்‌, ஏற்றுமதியாளர்களையும்‌ ஊக்குவிக்கும்‌. வகையிலும்‌, 2024 - 2025-ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ "ஏற்றுமதி ஆலோசனை மையங்கள்‌ " (Agri Export Consultancy Cell) அமைக்கப்படும்‌" என்ற அறிவிப்பின்படி, தருமபுரி வேளாண்மை துணை இயக்குநர்‌ (வேளாண்‌ வணிகம்‌) அலுவலகத்தில்‌ "ஏற்றுமதி ஆலோசனை மையம்‌” (Agri Export Consultancy Cell) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 


இம்மையத்தில்‌ ஏற்றுமதி வாய்ப்புள்ள வேளாண்‌ விளைபொருட்கள்‌, வேளாண்‌ சார்ந்த பொருட்கள்‌ குறித்து மாவட்ட வாரியாக விபரங்கள்‌ (பரப்பு, உற்பத்தி, தரம்‌, ஏற்றுமதி சந்தை வாய்ப்புள்ள நாடுகள்‌, ஏற்றுமதி நடைமுறைகள்‌ போன்றவை) தொடர்புடைய நிறுவனங்களின்‌ (Directorate General of Foreign Trade (DGFT) , Agricultural and Processed Food Produce Export Development Authority (APEDA), உதவியோடு தொகுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மேலும்‌ ஏற்றுமதிக்கேற்றவாறு முதன்மைப்‌படுத்தப்படுத்துதல்‌, சிப்பமிடல்‌ போன்றவற்றை மேற்கொள்ள வழிமுறைகளையும்‌ வங்கிக்கடன்‌, பெற வழிகாட்டுதலும்‌, வேளானர்‌ கட்டமைப்பு நிதியின்‌ கீழ்‌ வட்டி மானியம்‌ பெறுவதற்கான வழிமுறைகளையும்‌ விவசாயிகள்‌, சிறு வேளாண்‌ வணிகர்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, ஏற்கனவே வேளான்‌ ஏற்றுமதியில்‌ ஈடுப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள்‌ ஆகியோர்களுக்கு இலவசமாக வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்படுவதை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி. சாந்தி இ.ஆப. அவர்கள்‌ கேட்டுக்கொள்கிறார்‌.


மேலும்‌ விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை: இயக்குநர்‌ (வேளாண்‌ வணிகம்‌), தருமபுரி , அலுவலக ஏற்றுமதி மைய ஆலோசகர்கள்‌ / வேளாண்மை அலுவலர்கள்‌ (வேளாண்‌ வணிகம்‌) வேளாண்மை அலுவலர்‌ - 9500248368 அவர்களின் எண்ணில் தொடர்பு கொண்டு. பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.     

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies