Type Here to Get Search Results !

கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வு; மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழ், கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வை கண்காணித்திட மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழ், கொத்தடிமைத் தொழிலாளர் மறுவாழ்வை கண்காணித்திட மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.01.2025) நடைபெற்றது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாவட்டக் கண்காணிப்பு குழு கூட்டத்தின் முதன்மையான நோக்கம் 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறையினை நீக்க தமிழ்நாடு அரசு உறுதி ஏற்றுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் கணக்கெடுப்பு பணியின் இறுதி அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இக்கூட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு (District Vigilence Committee) 14.07.2017 அன்றும், தருமபுரி உபகோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு (Sub Divisional Vigilance) 05.03.2019 அன்றும், அரூர் உபகோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு (Sub Divisional Vigilance) 12.02.2019 அன்றும் உருவாக்கப்பட்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு (District Vigilence Committee) 10.01.2025 அன்று மறுசீரமைக்கப்பட்டது. 


மேலும் தருமபுரி மற்றும் அரூர் உட்கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டு வருகிறது. கொத்தடிமைத் தொழிலாளர் கணக்கெடுப்பு பணியின் அறிக்கையில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து இறுதி அறிக்கையை விரைந்து சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டெடுத்தல் தொடர்பான புகார் பெறப்பட்ட உடன் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விடுதலை சான்று வழங்கப்படுவதோடு உடனடி நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற தெரிவிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் வேலைவாய்ப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் Skill Training Program மூலம் பயிற்சிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை, தொண்டு நிறுவனங்கள் நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் மூலம் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தருமபுரி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது. மேலும், தருமபுரி மாவட்டத்தை கொத்தடிமைத் தொழிலாளர்கள் அல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திரு.மாதேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.சாகுல் ஹமீத், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884