Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞரின் கைவினைத் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞரின் கைவினைத் திட்டம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் மாவட்டத் தொழில் மைய கடன் வழிகாட்டி அலுவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகாதேவி, மீனா ஆகியோர் முன்னிலைவகித்தனர். வங்கி மேலாளர் நிதி சார் கல்வி ஆலோசகர் முருகன், தமிழ்நாடு கட்டுமான நல வாரிய சங்கம் பாலக்கோடு தவமணி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஆகியோர் விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு பேசுகையில் கட்டுமான சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் பயனாளிகளுக்கு தொழில் செய்வதற்காக 25% மானிய தள்ளுபடியில் 3லட்ச ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். 


மகளிர் சங்க உறுப்பினர்கள் திட்டத்தின் மூலமாக கட்டிட வேலைகள், நகை செய்தல், தையல் வேலை, துணிவெழுத்தல், தேய்த்தல், மலர் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள் என 25 வகையான தொழில்களுக்கும் கடன் வழங்கப்படும், கட்டுமான சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விழிப்புணர் முகாமில் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மகளிர் சங்க உறுப்பினர்கள் கட்டுமான சங்க உறுப்பினர்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies