இந்த நிலையில் ரங்கசாமி தனது சொத்தில் ஒரு பகுதியை முதல் மனைவியான மாரியம்மாளுக்கு கொடுத்துள்ளார். இதை ஏற்காத அவர் தனக்கு மேலும் சொத்து வேண்டும் என கேட்டு ரங்கசாமியி டம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று காலை மாரியம்மாள், தனது மகன் ஜெயராஜ், இவரது உறவிணர் தமிழ்செல்வன் (23) ஆகியோர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று வீட்டை எழுதி கொடுக்குமாறு கேட்டு உள்ளனர்.
இதற்கு ரங்கசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ், தமிழ் செல்வன் ஆகியோர் தாங்கள் மறைத்துவைத்திருந்த இரும்பு கம்பியால் ரங்கசாமியை சரமாரியாக அடித்து உள்ளனர். இதை தடுக்க வந்த ஜெயராஜின் சித்தி ஜோதியையும் அவர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிழந்தார். ரங்கசாமி படுகாயம் அடைந்தார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து மாரியம்மாள், ஜெயராஜ், தமிழ்செல்வன் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ரங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாரியம்மாள், ஜெயராஜ், தமிழ்செல்வன் ஆகிய 3 பேரையும் கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். ஜெயராஜ் மீது தர்மபுரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 17 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
சொத்து தகராறில் சித்தியை உறவிணருடன் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.