Type Here to Get Search Results !

மகேந்திரமங்கலம் நெடுஞ்சாலையில் மினிசரக்கு லாரியில் கடத்தி வந்த ரூ.3 இலட்சம் மதிப்பிலான, 2 டன் குட்கா மற்றும் மினிலாரி பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை கடத்தி செல்வதாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு காரிமங்கலம் நெடுஞ்சாலையில்  சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, அவ்வழியாக வந்த மினிசரக்கு லாரியை போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  3 இலட்சம்  ரூபாய் மதிப்பிலான சுமார் 2 டன் குட்கா சாக்கு பைகளில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து விசாரித்ததில் வேலூர் மாவட்டம், ஆற்காடு இராமசாமி தெருவை சேர்ந்த  மணிகண்டன் (வயது.35) என்பதும், இவர் மினிசரக்கு லாரியை ஓட்டி வந்ததும், இவர் உடன் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பெத்தனசாமி (வயது.55) என்பதும் தெரிய வந்தது.


இவர்கள் கர்நாடகா மாநிலம், பெங்களுரில் இருந்து கேரளாவிற்க்கு குட்கா மூட்டைகளை கடத்தி சென்றதும் தெரிய வந்தது, அதனை தொடர்ந்து மினிசரக்கு லாரியுடன்,  குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies