தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமியின் மனைவி சுமித்ரா (வயது.36) சிவா என்பவரின் மனைவி சக்தி (வயது.33) இவர்கள் பாலக்கோடு அருகே எருமாம்பட்டியில் உடல் நலக்குறைவால் உள்ள உறவினரை காண நேற்று ஆட்டோவில் பாப்பாரப்பட்டியில் இருந்து எருமாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
பாலக்கோடு அடுத்த செம்மநத்தம் கிரமாம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்ட இழந்து ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது, இதில் சுமித்ரா, சக்தி இருவரும் படுகாயமடைந்தனர், இருவரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விபத்துகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.