Type Here to Get Search Results !

தாங்கள் என போலீஸ் மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது.



பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சி எரிமலை இருளர் காலனியில் சிஐடி போலீஸ் என்று மிரட்டி விவசாயியை லத்தியால் தாக்கி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் இன்ஃபார்மர்கள் இரண்டு பேரில் ஒருவரான ஜெய்கணேஷ் என்பவரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 


மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணி பென்னாகரம் உதவி துணை சூப்பிரண்டு மகாலட்சுமி கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 


இதில் நள்ளிரவில் கிராமத்தில் நுழைந்து விவசாயியைத் தாக்கி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் ஜெய்கணேஷ் வயது 49, மற்றும் கக்கன்ஜிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சக்தி(36) என்ற இரண்டு பேர் மீதும் கொலை முயற்சி, ஆள்மாறாட்டம், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஜெய்கணேஷ் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இதற்கிடையில் ஜெயகணேஷை தாக்கியதாக எரிமலை கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
ஜெய்கணேஷ் மீது தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் சென்னை உள்பட சுமார் ஏழு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies