Type Here to Get Search Results !

பென்னாகரம்‌ ஒன்றியத்தில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

தருமபுரி மாவட்டம்‌, பென்னாகரம்‌ ஊராட்சி ஒன்றியத்தில்‌ நடைபெற்று வரும்‌ பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ இன்று (3112.2024) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.


தருமபுரி மாவட்டம்‌, பென்னாகரம்‌ ஊராட்சி ஒன்றியம்‌, ஊட்டமலை ஊராட்சி, மஞ்சக்கை கொடம்பு இருளர்‌ குடியிருப்பில்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ 13 பயனாளிகளுக்கு ரூ.67.06 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வீடு கட்டும்‌ பணிகள்‌ மற்றும்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ இன்று ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள்‌ விரைந்து முடித்து பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்‌.


முன்னதாக, ஏரியூர்‌ மற்றும்‌ பென்னாகரம்‌ வட்டத்தில்‌ நடைபெற்று வரும்‌ பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப. அவர்கள்‌ இன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌, வட்டாட்சியர்‌ மற்றும்‌ உதவி பெறியாளர்களுடன்‌ ஆலோசனை மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள்‌ விரைந்து முடித்து பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்‌.


இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ திரு.சுருளிநாதன்‌, திருமதி.ஷகிலா, வட்டாட்சியர்‌ திருமதி.லட்சுமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies