தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருரட்சி அலுவலகம் முன்பு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு பாலக்கோடு திமுக பேரூர் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பி.கே.முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது,
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர், தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளை வழங்கி சிறப்புறை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கில் முருகன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.வி.குமார், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் குமரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய துணை செயலாளர் ரவி, கவுன்சிலர்கள் மோகன், வசந்தி மோகன், ரூஹித் மற்றும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.