தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்க்குட்பட்ட பெல்ரம்பட்டி, திருமல்வாடி, சீங்காடு, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமித்து கொட்டகைகள் அமைத்தல், வீடு கட்டுதல், தோட்டம் அமைத்தல், நிலங்களை சமன் செய்தல், சாலைகள் அமைத்தல், விவசாயம் செய்தல், வேட்டையாடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர், அவ்வாறு செயல்படுவதை கண்டித்தும், வனக்காவலர்களின் பணியை தடுத்தாலோ, மிரட்டல் விடுத்தாலோ, காவல் துறை, வருவாய் துறை, வனத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு வனத்துறையினர் ஜிட்டான்டஅள்ளி, மாரவாடி, கொத்தலம், குண்டாங்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.