தருமபுரி இலக்கியம்பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு சமூக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் தலைமை தாங்கினார். கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள அடிப்படை வசதியான மின்விளக்குகள், சாலை வசதி போன்ற பிரச்சனைகளை கிராம சபை கூட்டத்தில் கோரிக்கைகளாக முன் வைத்தனர். இதில் துணைத் தலைவர் வித்யா வெங்கடேஷ், சரவணன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.