நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, ரேணுகா, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பயிற்சிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், கனிமுத்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சியில் பள்ளிகளில் பணிபுரியும், சத்துணவு சமையலர்கள், உதவியாளர்களுக்கு சுகாதாரமாக உணவு சபைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சமையல்கூடம் , சத்துணவு மையங்களில் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம் இவற்றுடன் உணவுப் பொருள் பராமரித்தல், இருப்பு வைத்தல், பயன்படுத்துதல், சமையல் செய்தல் குறித்தும் உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சமையலர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் முருகேசன் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வடிவேல் செய்திருந்தனர்.
